மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டம்
மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது, மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும், மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் பதவிக்கு தேர்வான அனைவருக்கும் நியமன உத்தரவு வழங்க வேண்டும், வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்ய கூடாது, கரூர் மின் வட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
கரூர் மின்வட்டத்தில் தொழிற்சங்க அலுவலகம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சாலையில் உள்ள கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கரூர் மின் பகிர்மான வட்டகிளை, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதற்கு பொருளாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பரமேஸ்வரன், திட்ட செயலாளர் தனபால், ஏ.ஐ.சி.சி.டி.யூ. செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story