காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2021 12:27 AM IST (Updated: 5 Feb 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஹள்ளிபுதூரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மோகனா (வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. 

இதில் மனமுடைந்த மோகனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story