வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 Feb 2021 12:29 AM IST (Updated: 5 Feb 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

க.பரமத்தி, 

க.பரமத்தி அருகே குரும்பபட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் பீகார் மாநிலம் பொக்காரியா என்ற ஊரை சேர்ந்த ஹரிபுரிபஸ்வான் மகன்கள் விருபஸ்வான் (வயது 38),  பீர்பால்பஸ்வான் ஆகியோர் வேலை செய்து வந்தனர். 

இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி விருபஸ்வான் கல்குவாரிக்கு செல்லாமல் தலைவலி என்று கூறிவிட்டு அங்குள்ள வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை அதிக நேரம் ஆகியும் கதவு திறக்காததால், பீர்பால்பஸ்வான் வீட்டைத் திறந்து பார்த்தார். அப்போது விருபஸ்வான் தூக்கில் பிணமாக கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து விருபஸ்வான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த சில மாதங்களாக விருபஸ்வானுக்கு அதிகப்படியான தலைவலி இருந்துள்ளது. இதனால் அவர் வலி தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

Next Story