ஈரோடு மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் பணியிட மாற்றம்


ஈரோடு மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 5 Feb 2021 3:22 AM IST (Updated: 5 Feb 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 15 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.

15 தாசில்தார்கள் 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய வருவாய் துறை மற்றும் போலீஸ் துறைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் 15 தாசில்தார்களை பணியிடம் மாற்றம் செய்து ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் நேற்று உத்தரவிட்டார்.

அதன்படி ஈரோடு தாசில்தாராக பணியாற்றிய பரிமளா தேவி, ஈரோடு முத்திரைகள் பிரிவு தனி தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, ஈரோடு ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பாலசுப்ரமணியம் ஈரோடு தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். பெருந்துறை தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் பவானி தாசில்தாராகவும், பவானி தாசில்தாராக பணியாற்றிய பெரியசாமி கோபி ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

பணியிட மாற்றம்
நம்பியூர் தாசில்தாராக பணியாற்றிய வெங்கடேஸ்வரன் நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அந்த பணியிடத்தில் இருந்த விஜயலட்சுமி பவானி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அந்தியூர் தாசில்தார் மாரிமுத்து சத்தியமங்கலம் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தாராகவும், அந்த பணியிடத்தில் இருந்த கார்த்தி பெருந்துறை தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

முத்திரைகள் பிரிவு ஈரோடு தனி தாசில்தாராக பணியாற்றிய துரைசாமி, ஈரோடு அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தாராகவும், இந்த பணியிடத்தில் இருந்த வீரலட்சுமி அந்தியூர் தாசில்தாராகவும், கோபி ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக இருந்த மகேஸ்வரி அந்தியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாராக பணியாற்றிய விஜயகுமார் கோபியில் காலியாக இருந்த கோட்ட கலால் அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பவானி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரான அமுதா நம்பியூர் தாசில்தாராகவும், ஈரோடு நிலவரித்திட்ட தனி தாசில்தாரான ஷீலா ஈரோடு ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராகவும், அந்தியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயலட்சுமி, பவானி வட்ட வழங்கல் அலுவலராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story