நெய்தலூர் துணை நீரேற்றும் நிலையம் முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்


நெய்தலூர் துணை நீரேற்றும் நிலையம் முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 5 Feb 2021 7:17 AM IST (Updated: 5 Feb 2021 7:20 AM IST)
t-max-icont-min-icon

நெய்தலூர் துணை நீரேற்றும் நிலையம் முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிகிறது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நச்சலூர்,

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் நீர் எடுக்கப்பட்டு பெருகமணி- நெய்தலூர் சாலை வழியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குடிநீருக்காக செல்கிறது. 

இதில் நெய்தலூரில் உள்ள துணை நீரேற்று நிலையத்தில் தண்ணீர் சேமித்து அதன் பின் மீண்டும் புதுக்கோட்டைக்கு செல்கிறது. இதையடுத்து நெய்தலூர் துணை நீரேற்றும் நிலையம் முன்பு புதுக்கோட்டைக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. குழாய் உடைப்பு ஏற்பட்ட சாலை நடுபகுதி வரை உள்ளது. 

பொதுமக்கள் கோரிக்கை

இதில் மரக்கிளைகளை ஊன்றி உள்ளனர். இதனால் சின்னப்பனையூர் - நங்கவரம் சாலையில் அடிக்கடி அரசு பஸ்கள், கல்லூரி வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சென்று வருவதால் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 

மேலும் அருகில் உள்ள ஊர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story