மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி கணவர் புகார்


மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி கணவர் புகார்
x
தினத்தந்தி 5 Feb 2021 8:50 AM IST (Updated: 5 Feb 2021 8:52 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் ஐ.ஜி.யிடம் கணவர் புகார் செய்தார்.

திருச்சி, 

திருச்சி திருவெறும்பூர் கும்பக்குடியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 45). இவர் நேற்று காலை உறவினர்களுடன் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி எனது மனைவி லதா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். வெளியே சென்று இருந்த நான், இதை கேள்விப்பட்டு வீட்டுக்கு ஓடி வந்து எனது மனைவியை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தேன். இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி என்னிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது எனது மனைவியை சிலர் மிரட்டியதால் தான் மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக கூறினேன். அதன்பிறகு நவம்பர் 12-ந் தேதி எனது மனைவி இறந்துவிட்டார். உடனே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாமல், எதிர்தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே எனது மனைவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

Next Story