கறம்பக்குடியில் சசிகலாவை வரவேற்று அமைச்சர் படத்துடன் சுவரொட்டி
சசிகலாவை வரவேற்று அமைச்சர் படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கறம்பக்குடி,
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி உள்ள சசிகலா 8-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை திரும்ப உள்ளார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் பெயரில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் படத்துடன் சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் தி.மு.க.வை வீழ்த்த, கழகத்தை வழிநடத்த வரும் பொதுச்செயலாளர் சசிகலாவை வரவேற்பதாக வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த சுவரொட்டி சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இதேபோல, புதுக்கோட்டை நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டியுள்ளார். இந்த சுவரொட்டிகள் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story