பாசஞ்சர் ரெயில்களையும் உடனே இயக்க வேண்டும்
பொதுமக்களின் நலன் கருதி மதுரை-செங்கோட்டை உள்ளிட்ட அனைத்து பாசஞ்சர் ரெயில்களையும் இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
பொதுமக்களின் நலன் கருதி மதுரை-செங்கோட்டை உள்ளிட்ட அனைத்து பாசஞ்சர் ெரயில்களையும் இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் தென்னக ெரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பயணிகள் ரெயில்
கடந்த வருடம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை மதுரை-செங்கோட்டை இடையே பாசஞ்சர் ெரயில் இயக்கப்பட வில்லை. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் போதிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்து முழு அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான விரைவு ெரயில்கள் சிறப்பு ரெயில் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது.
பெரும் சிரமம்
இந்த நிலையில் பாசஞ்சர் ரெயில்களை மட்டும் இயக்காமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரெயிலில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து விருதுநகருக்கும், ்மதுரைக்கும் தினந்தோறும் படிப்பு, வேலை, வியாபாரம் நிமித்தமாக ஏராளமானோர் சென்று வந்தனர்.
இந்த நிலையில் இந்த ரெயில் இயக்கப்படாததால் ஏராளமான பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி பஸ்களில் பயணம் செய்யும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் விருதுநகர், சாத்தூர் வழியாக இயக்கப்பட்ட நெல்லை- ஈரோடு-மயிலாடுதுறை ரெயில், நாகர்கோவில்-கோவை, மதுரை-புனலூர் ஆகிய பாசஞ்சர் ரெயில்களும் இயக்கப்படாததால் ஏழை பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கோரிக்கை
எனவே இனியும் காலம் தாழ்த்தாது நிறுத்தப்பட்ட பாஞ்சர் ரெயில்களை உடனடியாக இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் சார்பில் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story