கணவரை மிரட்ட தீக்குளிக்க முயன்ற பெண் தீயில் கருகி சாவு


கணவரை மிரட்ட தீக்குளிக்க முயன்ற பெண் தீயில் கருகி சாவு
x
தினத்தந்தி 5 Feb 2021 11:26 AM IST (Updated: 5 Feb 2021 11:28 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை மிரட்ட தீக்குளிக்க முயன்ற பெண் தீயில் கருகி பலியானார்.

காரைக்குடி,

காரைக்குடி குறிச்சிபிரிவு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம்.இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35) இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
முருகானந்தம் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகானந்தம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு மனைவியை ஆபாசமாக பேசியதாக ெதரிகிறது. 

இதனால் மனவேதனை அடைந்த கலைச்செல்வி தனது கணவருக்கு பாடம் புகட்ட தான் தீக்குளிப்பது போல நடிக்க திட்டமிட்டார். அதன்படி கணவரை மிரட்டுவதற்காக கலைச்செல்வி வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தார். பின்னர் கேனில் இருந்த மண்எண்ெணய்யை தன் தலையில் ஊற்றி இனிமேல் தொடர்ந்து குடித்து விட்டு வந்து தகராறு செய்தால் தீக்குளித்து விடுவதாக கூறி தீக்குச்சியை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ கலைச்செல்வி உடலில் பட்டு உள்ளது. ஏற்கனவே மண்எண்ெணய் ஊற்றி இருந்ததால் தீ உடனே மளமளவென அவரது உடலில் பற்றி எரிந்தது. இதில் உடல் கருகிய அவர் அலறியபடியே அங்கும், இங்கும் ஓடினார்.
உடனே அவரது கணவர் முருகானந்தம் கலைச்செல்வி உடலில் பற்றி இருந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story