எருது விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 26 பேர் காயம்


எருது விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 26 பேர் காயம்
x
தினத்தந்தி 5 Feb 2021 5:08 PM IST (Updated: 5 Feb 2021 5:08 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 26 பேர் காயம்மடைந்தனர். முககவசம் அணியாத விழாக்குழுவினருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

எருதுவிடும் விழா

திருப்பத்தூர் அருகே ரெட்டிவலசை கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 170 காளைகள் பங்கேற்றன. எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. கால்நடைகளை கால்நடை டாக்டர் சத்யா பரிசோதனை செய்தார், இதில் 2 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 

தர்மகர்த்தா கிருஷ்ணசாமி, ஊர் கவுண்டர் சஞ்சீவி ஆகியோர் தலைமை தாங்கினர். நாட்டாமை சங்கர் வரவேற்றார். நாகராஜன், தங்கவேல், சேட்டு, முன்னிலை வகித்தனர். விழாவை கிராமநிர்வாக அலுவலர்கள் பார்த்திபன், ராவணன் தொடங்கி வைத்தனர். 

மாடு முட்டி 26 பேர் காயம்

எருதுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு சீறிப் பாய்ந்து ஓடின. இருபுறமும் நின்று இருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்தினவர். அப்போது காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். பெரிய வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த லோகேஸ் (வயது20), ஆலமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (23), ரெட்டி வலசை கிராமத்தைச் சேர்ந்த சேகர் (50), அண்ணாமலை (41) ஆ
கியோரை, மாடு கொம்புகளால் குத்தியதில் பலத்த காயமடைந்து எலும்புகள் உடைந்து. 

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. அதேபோன்று மொத்தம் 35 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
முக கவசம் அணியாத விழாக் குழுவினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story