திருவண்ணாமலையில் மொபட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு


திருவண்ணாமலையில் மொபட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 5 Feb 2021 7:01 PM IST (Updated: 5 Feb 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் மொபட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை
 
ரூ.3 லட்சம் திருட்டு

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 3-ந் தேதி மொபட்டில் திருவண்ணாமலை -செங்கம் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து ரூ.3 லட்சம் எடுத்து அதனை ஒரு பையில் வைத்து தான் வந்த மொபட்டின் சீட் அடியில் வைத்து உள்ளார். 

தொடர்ந்து அங்கிருந்து அவர் மத்தலாங்குளத்தெருவில் உள்ள ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று சில நிமிடங்கள் கழித்து வந்து பார்த்த போது மொபட்டில் வைக்கப்பட்டு இருந்த பணத்துடன் கூடிய பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

2 ேபருக்கு வலைவீச்சு

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான கட்சிகளையும் பார்வையிட்டனர். 

அப்போது ரமேஷ் வந்த மொபட்டின் அருகில் நின்று கொண்டிருந்த 2 பே
ர் சீட் அடியில் உள்ள பெட்டியை போலி சாவி போட்டு திறந்து அதில் இருந்த பணப்பையை திருடி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது பதிவாகி இருந்தது. 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story