சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 51 பேர் கைது


ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
x
ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 5 Feb 2021 7:27 PM IST (Updated: 5 Feb 2021 7:27 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 51 பேர் கைது செய்யப்பட்டனர்

ஊட்டி

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 4.5 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. 

போராட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உடனே அங்கு தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 51 பேரை கைது செய்தனர்.

Next Story