கைதான 2 பேருக்கு 19-ந் தேதி வரை காவல்
கைதான 2 பேருக்கு 19-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுயானை ஒன்று, சமீபத்தில் தீ வைத்து கொல்லப்பட்டது. அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்டுத்தியது. இது தொடர்பாக மாவனல்லா பகுதியை சேர்ந்த பிரசாத்(வயது 36), ரேமண்ட் டீன்(28) ஆகிய 2 பேரை சிங்காரா வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று குன்னூர் கிளை சிறையில் இருந்து பிரசாத், ரேமண்ட் டீன் ஆகியோரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்து, கூடலூர் கோர்ட்டில் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்திய அவர், கைதான 2 பேரையும் வருகிற 19-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story