தைவான் குழுவினர் நாராயணசாமியுடன் சந்திப்பு
புதுவையில் தொழில் தொடங்குவது தொடர்பாக தைவான் குழுவினர் நாராயணசாமியை சந்தித்து பேசினர்.
புதுச்சேரி:
புதுவையில் தொழில் தொடங்குவது தொடர்பாக தைவான் குழுவினர் நாராயணசாமியை சந்தித்து பேசினர்.
தைவான் குழு
சென்னையில் உள்ள தைவான் நாட்டின் பொருளாதார மற்றும் கலாசார மையத்தின் இயக்குனர் ஜெனரல் பென் வாங் தலைமையிலான குழுவினர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்கள்.
அப்போது அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், தொழிலாளர் துறை செயலாளர் வல்லவன், தொழில்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
செல்போன் உதிரி பாகங்கள்
தைவான் குழுவினர் புதுவையில் தொழில் தொடங்க உள்ள சூழ்நிலைகள் குறித்து தெரிந்துகொள்ள புதுவை வந்துள்ளனர். அவர்கள் கம்ப்யூட்டர் மென்பொருள், செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பதில் அனுபவம் பெற்றுள்ளனர்.
மேலும் கடல் உணவு பொருட்களை பதப்படுத்தும் தொழிலிலும் முன்னணியில் உள்ளனர். அதற்கு தேவையான கட்டமைப்பும் அவர்களிடம் உள்ளது. இதற்கான இடம் மற்றும் மனிதவளம் புதுவை, காரைக்காலில் உள்ளது.
இங்குள்ள தொழிற்சாலைகளை பார்வையிட்டு விட்டு புதுவையில் தொழில் தொடங்குவது தொடர்பாக முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story