மனைவி குழந்தைகளை துன்புறுத்திய கணவர் வெட்டிக்கொலை


மனைவி குழந்தைகளை துன்புறுத்திய கணவர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2021 9:53 PM IST (Updated: 5 Feb 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே மனைவி,குழந்தைகளை துன்புறுத்திய கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மாமனார் போலீசில் சரண் அடைந்தார்.

பரமக்குடி:

பரமக்குடி அருகே மனைவி,குழந்தைகளை துன்புறுத்திய கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மாமனார் போலீசில் சரண் அடைந்தார்.

துன்புறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த துரை மகன் நாகநாதனுக்கும், பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் சங்கீதா என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சங்கீதா பரமக்குடி அருகே உள்ள அண்டகுடி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சங்கீதாவின் கணவர் நாகநாதன் மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும்குழந்தைகளை துன்புறுத்தி வந்துள்ளார். 

இதுகுறித்து அவர்கள் பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை. எனவே இது குறித்து சங்கீதா எமனேசுவரம் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார். உடனே போலீசார் நாகநாதனை கண்டித்துள்ளனர். 
இதனால் ஆத்திரம் அடைந்த நாகநாதன் அன்றிரவு மனைவியையும், குழந்தைகளையும் கொடுமை செய்துள்ளார். இதை கண்டிக்க அவரது மாமனார் கருப்பையா வீட்டிற்கு சென்றுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

சரண்

இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா கையில் வைத்திருந்த அரிவாளால் நாகநாதனை வெட்டி கொலை செய்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் எமனேஸ்வரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த கருப்பையா எமனேசுவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story