வேலூர்; முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
வேலூரில் முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வேலூர்
வேலூர் சேவா சமாஜம் பார்வையற்றோர் இல்லத்தில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பார்வையற்றோர் இல்லத்தின் செயல்பாடுகளையும், பார்வையற்றோர் இல்ல மேற்கூரைகள் பழுதடைந்துள்ளதை சரிசெய்வது குறித்தும் கலந்தாலோசித்தார்.
அதைத்தொடர்ந்து பொய்கையில் உள்ள செஞ்சிலுவை சங்க முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்து, முதியோர்களை பராமரிப்பது குறித்தும், முதியவர்களுக்கு வேட்டி, சேலை, பிஸ்கெட்டுகளை வழங்கினார். அப்போது முதியவர்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
பின்னர் அலுவலகத்தின் எதிரே உள்ள வாகனம் நிறுத்துமிடம் புதுப்பிப்பது குறித்தும், இதர புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார்.
தொடர்ந்து காகிதப்பட்டறை பகுதியில் செயல்படும் பணிப்புரியும் பெண்கள் விடுதியை ஆய்வு செய்து அதன் சுற்றுப்புறத்திலுள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுவது குறித்தும், கழிப்பறை வசதி, சமையலறை புதுப்பித்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனி, செஞ்சிலுவை சங்க செயலாளர் மாறன், துணைத்தலைவர் வெங்கடசுப்பு, பொருளாளர் உதயசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story