காங்கேயம்:செல்போன் திருடிய 2 பேர் கைது


காங்கேயம்:செல்போன் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2021 10:17 PM IST (Updated: 5 Feb 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


காங்கேயம்,

காங்கேயத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அசோக் (வயது38), புதுக்கோட்டை மாவட்டம்திருமயம் தாலூகாவில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை  சேர்ந்த சசிக்குமார் (34) இருவரும் நண்பர்கள். கடந்த மாதம் 27-ந்தேதி சசிக்குமார், அசோக்கை சந்திக்க காங்கேயம் வந்துள்ளார். 

அன்று இரவு காங்கேயம்-கரூர் சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையின் பூட்டை உடைந்து கடையில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து செல்போன் கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்த நிலையில் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பர் தொடர்ந்து காண்காணிக்கப்பட்டு வந்தது. 

இதில் செல்போன்கள் புதுக்கோடை்டையில் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை சென்ற காங்கேயம் போலீசார் செல்போன் டவரை கண்டறிந்து அசோக், சசிக்குமார், இருக்கும் இடத்திற்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்பு கைது செய்யப்பட்ட அசோக், சசிகுமார் இருவரையும் காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

Next Story