பேரணாம்பட்டு அருகே; திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பேரணாம்பட்டு அருகே; திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2021 10:22 PM IST (Updated: 5 Feb 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் மேல்முருங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிகா (வயது 20). இவருக்கும் குடியாத்தத்தை அடுத்த சிங்கலபாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும் வருகிற 24-ந்தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

இதற்காக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து திருமண பத்திரிகை கொடுத்து வந்தனர். 

இந்த நிலையில் ஜோதிகாவுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். 

அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் குமரன், ஜோதிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story