தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்ப
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 2 மீனவர்களை கடலோர பாதுகாப்பு போலீசார் நேற்று மீட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 2 மீனவர்களை கடலோர பாதுகாப்பு போலீசார் நேற்று மீட்டனர்.
படகு பழுது
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜபாளையத்தை சேர்ந்தவர் அற்புதராஜ் (60). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இவரும், மற்றொரு மீனவரான தாளமுத்துநகரை சேர்ந்த சுப்பிரமணியன் (55) என்பவரும் மீன்பிடிக்க புறப்பட்டு சென்று உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து ஒரு கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகின் புரொப்பல்லரில் கயிறு சிக்கியதால் படகு பழுதாகி கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் அவர்கள் 2 பேரும் கடலில் குதித்து நீந்தி உயிருக்கு போராடியவாறு தத்தளித்து உள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றுள்ளனர்.
மீட்பு
அவர்கள் மீனவர்கள் அற்புராஜ் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் உடனடியாக தக்க உபகரணங்களை வழங்கி ரோந்து படகு மூலம் மீட்டனர். மேலும் அவர்கள் இருவரும் பத்திரமாக பழைய துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதற்கிடையே பழுதாகி கடலில் மூழ்கிய நாட்டுபடகை மீனவர்கள் வேறு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மூலம் கயிறுகட்டி மீட்டு கரை சேர்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story