கடலூரில் 25ந்தேதி தென்பெண்ணை ஆற்றில் மகா ஆரத்தி
கடலூரில் வருகிற 25ந்தேதி தென்பெண்ணை ஆற்றில் மகா ஆரத்தி விழா நடக்க உள்ளதாக அகில பாரதீய சன்னியாசிகள் சங்க நிறுவனர் தெரிவித்தார்.
கடலூா்:
அகில பாரதீய சன்னியாசிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுவாமிகள் மேகானந்தா, சிவபிரமானந்தா, சிவானந்தபுரி, கடலூரை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன், ஞானச்சந்திரன், சிவப்பிரகாசம், கார்த்திகேயன் உள்பட கலந்து கொண்டனர்.
பின்னர் சுவாமி ராமானந்த மகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருவிழா
ஆறு, ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும், தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2011-ம் ஆண்டு முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு காவிரி புஷ்கரம், 2018 -ம் ஆண்டு தாமிரவருணிக்கு புஷ்கரம், 2019 -ம் ஆண்டு வைகையில் பெருவிழா நடத்தி உள்ளோம்.
இந்த ஆண்டு தென்பெண்ணை நதிக்கு திருவிழா நடத்த உள்ளோம். இதற்காக கடந்த 30-ந் தேதி தென் பெண்ணையாறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் நந்திமலையில் இருந்து 6 துறவிகள் 7 கலசங்களில் புனித நீரை எடுத்து பாதயாத்திரையாக வருகிறார்கள். வரும் வழியில் 320 இடங்களில் படித்துறைகள், அணைக் கட்டுகளில் உள்ளூர் மக்களைத் திரட்டி பூஜை நடத்துகிறார்கள்.
தென்பெண்ணை ஆறு
இந்த பாதயாத்திரை குழுவினர் வருகிற 25-ந்தேதி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தடுப்பணையில் நிறைவு செய்கின்றனர். அங்கு மகா ஆரத்தி எடுத்து வழிபாடு நடக்கிறது. மறுநாள் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலக்கப்படுகிறது. இதில் த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story