திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் உல்லாசம் வாலிபர் கைது
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மரக்காணம் தாலுகா டி. நல்லாளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம் மகன் கலையரசன் (வயது 22). பொக்லைன் டிரைவர். இவருக்கும் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த ஒரு 19 வயது இளம் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி, இளம் பெண்ணிடம் கலையரசன் உல்லாசம் அனுபவித்துள்ளார். தற்போது, இளம்பெண்ணை அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து இளம் பெண், திண்டிவனம் அ னைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து கலையரசனை கைது செய்தார்.
Related Tags :
Next Story