அரசு ஊழியர்கள் 102 பேர் கைது
தேனியில் 4-வது நாளாக சாலையில் அமர்ந்து அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர்
தேனி:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 2-ந்தேதி முதல் தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
அதன்படி தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு 4-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடந்தது.
இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 88 பெண்கள் உள்பட 102 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story