ஆந்திராவில் இருந்து ரெயிலில் வந்த 4 மாணவர்கள் அரக்கோணத்தில் மீட்பு


ஆந்திராவில் இருந்து ரெயிலில் வந்த 4 மாணவர்கள் அரக்கோணத்தில் மீட்பு
x
தினத்தந்தி 6 Feb 2021 12:50 AM IST (Updated: 6 Feb 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து ரெயிலில் வந்த 4 மாணவர்கள் அரக்கோணத்தில் மீட்கப்பட்டனர்

அரக்கோணம்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதடூர், அமிர்தா நகரை சேர்ந்தவர்கள் 14 வயது மாணவர்கள்3 பேர் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். மற்றொரு மாணவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவர்கள் 4 பேரும் கடந்த 3-ந் தேதி மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று புத்தகப் பையை வைத்து விட்டு விளையாடுவதற்காக வெளியே வந்துள்ளனர். பொதடூர் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து கடப்பா செல்லும் ரெயிலில் ஏறியள்ளனர். பின்னர் கடப்பாவில் இருந்து திருப்பதி செல்வதற்காக மும்பையில் இருந்து சென்னை செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியுள்ளனர். 

ரெயில் ரேணிகுண்டா வழியாக சென்றதால் திருப்பதி செல்வதாக நினைத்து இறங்காமல் இருந்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகர் இவர்களிடம் டிக்கெட் கேட்டபோது அவர்கள் முன்னுக்குபின் முரணான பதில் சொன்னதால், அவர்களை டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது பெற்றோர்கள் திட்டியதால் திருப்பதி செல்வதற்காக வீட்டைவிட்டு வந்ததாக தெரிவித்தனர். 
அதைத்தொடர்ந்து பெற்றோர்களை வரவழைத்து, மாணவர்களை ஒப்படைத்தனர். 

Next Story