மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க பார்வையாளர் நேரம் நீட்டிப்பு - தொல்லியல் துறை அறிவிப்பு


மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க பார்வையாளர் நேரம் நீட்டிப்பு - தொல்லியல் துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2021 1:24 AM IST (Updated: 6 Feb 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், புராதன சின்னங்களை கண்டுகளிக்க பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம். அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட பல்லவர் கால புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது.

இந்த பாரம்பரிய புராதன சின்னங்களை கண்டுகளிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்று ஊரடங்கால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்தன. கடந்த டிசம்பர் மாதம் முதல் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அப்போது காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என பயணிகள் கூடுதலாக 2 மணி நேரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது. பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story