செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் மீட்பு


செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் மீட்பு
x
தினத்தந்தி 6 Feb 2021 3:07 AM IST (Updated: 6 Feb 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் மீட்பு

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் சர்வேஷ் (வயது 13). இவன் சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் அடிக்கடி செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்து உள்ளான். இதை அவனது பெற்றோர் கண்டித்தனர். மேலும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி வந்தனர். ஆனால் மாணவன் செல்போன் விளையாட்டை கைவிடவில்லை.மேலும் ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே ஆன்லைன் மூலம் படித்து வருகிறேன் என்று பெற்றோரிடம் கூறி வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவன் செல்போனில் விளையாடி கொண்டிருப்பது தெரிந்தது. இதனால் மகனை பெற்றோர் கண்டித்தனர்.

இதன்பின்னர் சர்வேஷ் வீட்டில் இருந்து மாயமானான். அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை. இதனால் பாலசுப்பிரமணி தனது மகனை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இதையொட்டி அவர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் சர்வேசை தேடினர். பின்னர் விழுப்புரத்தில் சர்வேஷ்  மீட்கப்பட்டான்.

Next Story