4-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்; 70 பேர் கைது


4-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்; 70 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2021 3:31 AM IST (Updated: 6 Feb 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து 70 பேர் கைது செய்யப்பட்டனா்.

பெரம்பலூர்:

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் நேற்று 4-வது நாளாக பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். 

போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு திடீரென்று சாலையில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 70 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அருகேயுள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

Next Story