முக்கூடலில் பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்


முக்கூடலில் பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Feb 2021 4:11 AM IST (Updated: 6 Feb 2021 4:11 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடலில் பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

முக்கூடல்,

முக்கூடல் ஆதிமூலனார் தெருவில் தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும், தற்போது தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடக்கோரியும் முக்கூடல் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் ஆலங்குளம் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் மற்றும் நகரப்பஞ்சாயத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story