திருப்பூர் தெற்கு தொகுதியில் 169 புதிய துணை வாக்குச்சாவடிகள்


திருப்பூர் தெற்கு தொகுதியில் 169 புதிய துணை வாக்குச்சாவடிகள்
x
தினத்தந்தி 6 Feb 2021 5:15 AM IST (Updated: 6 Feb 2021 5:33 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தெற்கு தொகுதியில் 169 புதிய துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் தெற்கு தொகுதியில் 240 வாக்குச்சாவடிகள் உள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடியை பிரித்து புதிதாக துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து புதிதாக 169 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள வளாகத்தில் 120 வாக்குச் சாவடிகளும், வேறு மையத்தில் 49 வாக்குச்சாவடிகளும் அமைய இருக்கிறது. இது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் (கணக்கு) சந்தான நாராயணன், கணக்கு அலுவலர்கள் மாரிமுத்து, குமரேசன் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடிகள் தொடர்பான ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story