பல்லடத்தில், கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி


பல்லடத்தில், கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Feb 2021 5:33 AM IST (Updated: 6 Feb 2021 5:46 AM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்.

பல்லடம்,

பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் நாகராஜ் (வயது 23).  பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற நாகராஜ் அதன்பின்னர்   வீடு திரும்பவில்லை. இதையடுத்து இவரது பெற்றோர் வெளியூர் வேலைக்கு சென்று இருப்பார் என நினைத்து செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. 

இந்த நிலையில் நேற்று மாலை பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வாலிபர் உடல் மிதப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புப் படையினருடன் சென்ற போலீசார் அவர்கள் உதவியுடன் உடலை மீட்டனர். பின்னர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் காணாமல் போன பெயிண்டர் நாகராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கிணற்றில் தவறி விழுந்து நாகராஜ் இறந்து இருக்கலாம்? என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story