பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைப்பு
திருப்பூரில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கடந்த மாதம் 27-ந் தேதி பிறந்து 15 நாட்களே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர் கைவிட்டு சென்றுள்ளனர். இதன் பின்னர் அந்த குழந்தை பச்சிளம் குழந்தைகள் வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அந்த குழந்தைக்கு அடிப்படை பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டன. இதற்கிடையே நேற்று அந்த குழந்தைக்கு மிருத்துள் என பெயரிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை பெற்றோர்களால் கைவிடப்பட்ட 7 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆண் குழந்தைகள், 3 பெண்குழந்தைகள். இந்த 7 குழந்தைகளும் பராமரிக்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story