கொரோனா நிவாரண பணிக்கு மேலும் ரூ.2.3 கோடி நிதி- சத்குரு வழங்கினார்


கொரோனா நிவாரண பணிக்கு மேலும் ரூ.2.3 கோடி நிதி- சத்குரு வழங்கினார்
x
தினத்தந்தி 6 Feb 2021 6:30 AM IST (Updated: 6 Feb 2021 6:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண பணிக்கு மேலும் ரூ.2.3 கோடி நிதியை சத்குரு வழங்கினார்.

கோவை,

‘முழுமையாக வாழ்’ என்ற தலைப்பில் சத்குரு வரைந்த முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கும், ஈஷாவின் கம்பீரமான ‘பைரவா’ காளையின் நினைவாக வரைந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கும் ஏலம் போனது. தற்போது சத்குரு வரைந்த 3-வது ஓவியம் ரூ.2.3 கோடிக்கு ஏலம் போனது. 

அந்த நிதியை கொரோனா நிவாரண பணிகளுக்கு சத்குரு வழங்கினார். ஈஷா அவுட்ரீச் அமைப்பு, கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு நிவாரண உதவிகளை செய்ய தொடங்கியது. 

குறிப்பாக, கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் தொலைதூர மலைவாழ் கிராம ஏழை மக்களுக்கு உணவு, மருத்துவம், தூய்மைப் பணியாளர்களுக்கு  மருத்துவ கருவிகள், முக கவசம், நில வேம்பு, கப சுர குடிநீர் வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன்மூலம் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பயன்பெற்று உள்ளதாக ஈஷா அவுட்ரீச் தெரிவித்துள்ளது. 

Next Story