தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி அருகே தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி கணபதி, நவகிரக, மகாலட்சுமி, காலபைரவ மகா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை, தீர்த்த பிரசாதம் ஆகியவை நடைபெற்றது. மதியம், காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. சாமி தங்க கவசத்தில் அருள் பாலித்தார்.
இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சணகால பைரவர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. இதில் சூரன்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story