மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விவசாயி கைது


மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 6 Feb 2021 8:29 AM IST (Updated: 6 Feb 2021 8:31 AM IST)
t-max-icont-min-icon

மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விவசாயியை போலீசாா் கைது செய்தனா்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை கிராமம் பாரதியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் என்ற சுப்பிரமணி (வயது 54). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை 20 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய பெண்ணை சாக்லெட் காட்டி அழைத்துச்சென்று, அவரிடம் தவறாக நடக்க முயன்றார். 

இது தொடர்பாக அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தார்.

Next Story