சுகாதார கேடு ஏற்படும் விதமாக செயல்பட்ட டீக்கடை உரிமையாளருக்கு நோட்டீஸ்


சுகாதார கேடு ஏற்படும் விதமாக செயல்பட்ட டீக்கடை உரிமையாளருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 6 Feb 2021 11:11 AM IST (Updated: 6 Feb 2021 11:15 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார கேடு ஏற்படும் விதமாக செயல்பட்ட டீக்கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நொய்யல், 

கரூர் மாவட்டம் காகித ஆலையில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் புகளூர் ரயில்வே கேட் அருகே ஓட்டல்கள், டீக் கடைகள், பேக்கரிகள், பெட்டிக்கடைகள் என பல்வேறு கடைகள் உள்ளன. இதேபோல, புகளூர் ரயில்வே கேட் இருப்புப் பாதைக்கு அடியில் குகைவழிப் பாதையையொட்டி டீக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

அந்த டீக்கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் செல்லும் பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ளவர்களை கடித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் வரும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் வீரமணி மற்றும் மயில்வாகனன் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காகித ஆலை சுகாதார அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், சுகாதார கேடு ஏற்படும் விதமாக செயல்பட்ட ஒரு டீக்கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர். பின்னர், இனிமேல் கழிவுநீர் வெளியேறாதவண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். அவ்வாறு செயல்படவில்லை என்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story