நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு இடமாற்றம்


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு இடமாற்றம்
x
தினத்தந்தி 6 Feb 2021 12:39 PM IST (Updated: 6 Feb 2021 12:39 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி முருகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் 

தென்காசி சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சுரண்டை மாரீஸ்வரி, கடையநல்லூர் மனோகரன், தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சரஸ்வதி ஆகியோர் நெல்லை மாநகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, ஏரல் முத்துலட்சுமி ஏ.சி.டி.யு. பிரிவு மெகா, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு பிரிவு ஜானகி, இரணியல் முத்துராஜ், சுசீந்திரம் ஜெயச்சந்திரன், கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு குமாரவேல், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நாகலட்சுமி ஆகியோர் நெல்லை மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகர்

நெல்லை மாநகரம் ஏ.சி.எஸ். பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, கட்டுப்பாட்டு அறை இந்திரா, வெடிகுண்டு தடுப்பு பிரிவு மீராள் பானு, சந்திப்பு குற்றப்பிரிவு சண்முகவடிவு, சைபர் கிரைம் பிரிவு கோமதி, மதுவிலக்கு பிரிவு ஜோஸ்லின் அருள்செல்வி, மாநகர குற்றப்பிரிவு முத்துலட்சுமி, டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ரசீதா, மேலப்பாளையம் மகாலட்சுமி, பேட்டை வேல்கனி, பாளையங்கோட்டை சோமசுந்தரம், சந்திப்பு ரேனியஸ் ஜேசு பாதம், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் பிரவீனா ஆகியோர் நெல்லை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் மதுரை மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கர் கண்ணன், சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் சமீம் பானு, விருதுநகர் இரண்டாவது பிரிவு சுமதி, விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் கண்ணாத்தாள் ஆகியோர் நெல்லை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் 

நெல்லை மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன், நெல்லை மாநகர ஆயுதப்படை வாகன போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆகியோர் நெல்லை சரகத்துக்கும், சங்கரன்கோவில் போக்குவரத்து பிரிவு மார்ட்டின், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் நெல்லை மாநகரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story