ஈரோட்டில் 5-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்


ஈரோட்டில் 5-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 6 Feb 2021 12:39 PM IST (Updated: 6 Feb 2021 12:39 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 5-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்

ஈரோடு
ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் மத்திய அரசு இந்த ஆணையை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில், கடந்த 1-ந்தேதி முதல் ஈரோடு பெருந்துறை ரோட்டில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது. இதில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story