டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பாஷா, சாகுல் அமீது, மண்டல தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. ஐ.டி.பி.ஐ. மற்றும் எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லகுமாரசாமி, ராஜேஸ் ராஜப்பா, விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, எஸ்.சி. பிரிவு தலைவர் சின்னச்சாமி, பொதுச்செயலாளர்கள் வின்சென்ட், கனகராஜ், முகமது யூசுப், நடராஜ், கண்ணப்பன், செந்தில்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
-
Related Tags :
Next Story