சங்கராபுரம் அருகே பெண் எரித்துக்கொலை யார் அவர்? போலீசார் விசாரணை
சங்கராபுரம் அருகே பெண் எரித்துக்கொலை யார் அவர்? போலீசார் விசாரணை
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மயிலம்பாறை, காட்டுபிள்ளையார்கோவில் அருகே உள்ள முட்தோப்பில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவலறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி, இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த பெண்ணை யாரோ மர்மநபர்கள் எரித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. ஆனால் இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story