எலியை பிடிக்க வீட்டுக்குள் புகுந்த பாம்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எலியை பிடிக்க வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.
்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடவார் வளாகம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன். (வயது 35). கூலி தொழிலாளி. இவர் நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவியும் கைக்குழந்தையும் இருந்து உள்ளனர். அப்போது அருகில் உள்ள வயக்காட்டு பகுதியில் இருந்து எலி ஒன்று வீட்டுக்குள் நுழைந்து உள்ளது. அதை விரட்டி பிடிப்பதற்காக 7 அடி நீளமுள்ள பாம்பு வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டுக்குள் பாம்பு நுழைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கைக்குழந்தையை தூக்கி கொண்டு அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினார். பாம்பு, பாம்பு என சத்தம் போட்டார். உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு விட்டனர். அவரது வீட்டுக்குள் புகுந்த பாம்பு எலியை வேட்டையாடி கொண்டு இருந்தது.
உடனே இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டுக்குள் அங்கும், இங்கும் ஓடிய பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அவற்றை வனப்பகுதியில் விட்டனர். அதன்பின்னரே அந்த பெண் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
Related Tags :
Next Story