தூத்துக்குடியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பங்கேற்பு


தூத்துக்குடியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்  போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Feb 2021 6:00 PM IST (Updated: 6 Feb 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
விழிப்புணர்வு கூட்டம்
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
சிறுவயதில் எந்த கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் உட்படாமல் நன்றாக படிக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பது எல்லோரும் சந்திக்க கூடியது. அதற்காக தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு செல்லக்கூடாது. அடுத்த முறை மற்றொரு வகையில் வெற்றி பெற்று நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பல வழிகள் உள்ளது. 
சாலை விதிகள்
சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சாலை விபத்துக்களில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிவதன் மூலம் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பில் 40 சதவீதம் தடுக்க முடியும். மேலும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும். சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார். 
விழிப்புணர்வு கூட்டத்தில் பள்ளி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளி குழுமத்தின் நிர்வாக அதிகாரி ஜோசப் ஜான் கென்னடி, முதல்வர் பால்கனி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
----------


Next Story