போளூர் அனுமதியின்றி வைக்கப்பட்ட மருது பாண்டியர் சிலைகள் அகற்றம்


போளூர் அனுமதியின்றி வைக்கப்பட்ட மருது பாண்டியர் சிலைகள் அகற்றம்
x
தினத்தந்தி 6 Feb 2021 6:39 PM IST (Updated: 6 Feb 2021 6:39 PM IST)
t-max-icont-min-icon

போளூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட மருதுபாண்டியர் சிலைகள் அகற்றப்பட்டது.

போளூர்

போளூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட மருதுபாண்டியர் சிலைகள் அகற்றப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருேக அல்லியாளமங்களம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் இளைஞர்கள் சிலர் மருது பாண்டியர் சகோதரர்கள் 2 சிலைகளைஇன்று அதிகாலை திடீரென்று வைத்திருந்தனர். 

விரைவில் முக்கிய பிரமுகர்கள் வந்து திறப்பதாக கிராம மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த போளூர் தாசில்தார் சாப்ஜான், துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் விரைந்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் இளைஞர்கள் சிலர் சிலையை வைத்ததாக தெரிந்தது. உடனடியாக அந்த 2 சிலைகளை அகற்றி மொடையூரில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் வைத்தார்கள். 

2 அடி பீடத்தில் 3 அடி உயரத்தில் சிமெண்ட் டில் அந்த 2 சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

---

Next Story