காங்கிரஸ் கட்சி சர்பில் சாலை மறியல்
குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சி சர்பில் சாலை மறியல் நடந்தது.
குடியாத்தம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று மாலை குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
சாலை மறியல் போராட்டத்தில் வட்டார தலைவர்கள் வீராங்கன், சங்கர், வாசு, ஜார்ஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.தேவராஜ், கிருஷ்ணவேணி, மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கரன், ராஜேந்திரன், குபேந்திரன், செல்வகுமார், விஜயேந்திரன், பாரத் நவீன்குமார், சிவகாமி, மகாலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
Related Tags :
Next Story