2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 6 Feb 2021 9:16 PM IST (Updated: 6 Feb 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா கடத்தல் வழக்கு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கம்பம்:


கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி போலீசார் வாகன சோதனை செய்தனர்.

 அப்போது கார், மினிவேன், மோட்டார்சைக்கிள் ஆகியவை மூலம் 176 கிலோ கஞ்சா கடத்தி வந்த வேல்முருகன், குபேந்திரன், காளிராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

இந்த வழக்கில் கம்பம் கோம்பை தெருவை சேர்ந்த மலைச்சாமி (வயது 36), கண்ணன் (36) ஆகியோர் போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்தனர். 


இவர்களை கடந்த மாதம் 7-ந்தேதி கம்பம் வடக்கு போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் மலைச்சாமி, கண்ணன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு பரிந்துரை செய்தார். 

அதன்பேரில் மலைச்சாமி, கண்ணன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story