திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்
திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 120 பெண்கள் உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story