நூல் ஏற்றுமதியை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
நூல் ஏற்றுமதியை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்,
நூல் விலை உயர்வு மற்றும் தடையில்லாமல் நூல் கிடைப்பதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டும் வருவதற்காக அவசர ஆலோசனை கூட்டம் நேற்று மாலை திருப்பூர் அப்பாச்சிநகரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை தாங்கி பேசினார். பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் நலன் கருதி நூல் ஏற்றுமதியை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பது. ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு அக்குழு மூலம் நூற்பாலைகள் சங்கங்களை நேரில் அணுகி அவர்களிடம், நூல் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்துவது. தங்குதடையின்றி நூல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் நூல் விலையை உயர்த்த வேண்டாம் என வலியுறுத்துவது. ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் புதிய சிறப்புக்குழு உருவாக்கப்பட்டு, நூல் கொள்முதல் வருகிற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பது. ஜாப் ஒர்க் மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என அனைத்து சங்கங்களிடம் வலியுறுத்துவது.
வெளிநாட்டு இறக்குமதியாளர்களிடம் இந்த அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்களுக்கு கேட்கும் விலை உயர்வை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் தொழில் வளர்ச்சியை கருத்தில்கொண்டு நிறைவேற்றப்பட்டன. இதில் ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story