கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சாலை மறியலில்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
விவசாயிகளுக்கு எதிரான 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அருகே நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கஜேந்திரன், வட்ட செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் சாந்தமூர்த்தி மற்றும் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு விவசாயிகளை பாதிக்கு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், விவசாயிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் அடக்குமுறையை கண்டித்தும், டெல்லி மாநில எல்லைகளில் முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி போலீசார் மறியலில் ஈடுபட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்மணி உள்பட 27 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story