பெரும்பாலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தி.மு.க. பிரமுகர் கைது
பெரும்பாலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள சின்னம்பள்ளி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட 16 வயது சிறுமி வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சிறுமியை தேடி காட்டுப்பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்து அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான கோவிந்தராஜ் (35) ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது அந்த வாலிபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அழுதபடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெரும்பாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story