நெல்லையப்பர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
நெல்லையப்பர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் துர்கா ஸ்டாலின் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
துர்கா ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வந்துள்ளார்.
அவர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
நெல்லையப்பர் கோவிலில் வழிபாடு
இந்த நிலையில் துர்கா ஸ்டாலின் நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலுக்கு வந்தார்.
அங்கு சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அங்குள்ள ஆறுமுகநயினார் சன்னதி, குபேரலிங்கம், குருபகவான் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அத்துடன் சனி பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட்டார்.
குழந்தைகள் ஆர்வம்
துர்கா ஸ்டாலின் பிரகாரத்தில் சுற்றி வந்தபோது அவரை கண்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் அவருடன் ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அப்போது துர்கா ஸ்டாலினுடன் தங்கை ஜெயந்தி சரவணன், நெல்லையை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் பலர் வந்தனர்.
Related Tags :
Next Story