நெல்லை, நாங்குநேரியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு


நெல்லை, நாங்குநேரியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2021 3:49 AM IST (Updated: 7 Feb 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, நாங்குநேரியில் 2 பெண்களிடம் மர்மநபர்கள் நகை பறித்து சென்றனர்.

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் சுப்ரமணியபுரம் தெருவை சேர்ந்தவர் ஞானமாரி. இவருடைய மனைவி வேம்புஅம்மாள் (வயது 65). இவர் நேற்று அதிகாலை 6 மணி அளவில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர், வேம்புஅம்மாள் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, அங்கு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாங்குநேரி அருகே உள்ள கீழபுத்தநேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சேர்மக்கனி (70). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள குளத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் சேர்மக்கனி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story