டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பவானி
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நசியனூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் ஈரோடு வட்டார தலைவர் நடராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் மூர்த்தி, ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாஷா, பொதுச்செயலாளர்கள் முகமது அர்சத், கனகராஜ், வின்சென்ட், சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story